சென்னை

ன்று முதல் சென்னை மற்றும் மைசூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நேற்று தெற்கு ரயில்வே ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

“இன்று (3 ஆம் தேதி) முதல் வரும் 31 ஆம் தேதி வரை சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06037) அதே நாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும். மறுமார்க்கமாக, அதே தேதிகளில் மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (06038) அதே நாள் இரவு 7.20 மணிக்குச் சென்னை சென்டிரல் வந்தடையும். 

இதேபோல, வரும் 7 ஆம் தேதி மற்றும் 14 ஆம்தேதி சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு கோட்டயம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06091) மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 8-ந்தேதி மற்றும் 15-ந்தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்குச் சென்னை சென்டிரல் சென்றடையும்” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.