சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து இருந்தது .

தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவத் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.