டெல்லி: IVF செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க கணவனின் உயிரணு தேவைப்படுவதால் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உத்தர பிரதேசம் லக்னோவை பெண் ஒருவர் மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவரை மணந்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ள போபால் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினர்.
வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளையில் கணவனின் விந்தணுவை பயன்படுத்தி செயற்கை முறையில் (IVF) கர்ப்பம் தரிக்க விரும்புவதாக பெண் கூறியுள்ளார்.
இதற்கு கணவன் தரப்பு மறுத்து விட சம்பந்தப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தை நாடி தனக்கு கணவனின் உயிரணு கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பங்கஜ் மித்தல் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பெண்ணின் விருப்பத்திற்கேற்ப போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கை லக்னோவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டனர்.
செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்கும் முறைக்கு கணவன் மருத்துவர் ரீதியாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதுவரையில் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதாகவும் விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
[youtube-feed feed=1]