மராவதி

லது கண் புரைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீடு திரும்பி உள்ளார்.

கடந்த மாதம் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ‘மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

அவர் 53 நாள்களுக்குப் பிறகு சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டு நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.  அவர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, வீடு திரும்பி உள்ளார்.