டில்லி

டில்லி பகுதியில் மாசு அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல் கழிவுகளை எரிப்பதால் அந்த புகை மாசு டில்லியைச் சூழ்கிறது. மேலும் டில்லி சாலை மற்றும் வீதிகளை சுத்தம் செய்வதால் கிளம்பும் தூசு, வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மாசு போன்றவையும் சேர்ந்து கொள்கிறது.

தற்போது டில்லியில் விழும் லேசான பனிப்பொழிவால் தூசு மாசு அதனோடு சேர்ந்து எங்கும் கலைந்து போக வழி இல்லாமல் அந்தரத்தில் தேங்கிப் பனிப் பொழிவைப் போல பார்வைத்திறனை குறைக்கிறது. பொதுமகள் இந்த தூசு மாசுவால் பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

பொதுமக்களைக் காப்பாற்ற டில்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது கட்டுமான பணிகள் மற்றும் பழைய கட்டிட இடிப்பு பணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தூசு கட்டுப்படுத்தப்பட்டு டீசல் பேருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த நடவடிக்கைகளால் முழு பலன் கிட்டவில்லை.

டில்லி அர்சு தொடக்கப்பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அளித்து இதை நீட்டிப்பது பற்றி வரும் திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

டில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, கிரேடட் ரெஸ்பான்ஸ் படையின் திட்டம் 4 அமல்படுத்தப்பட்டு சாலையில் தூசியைச் சுத்தம் செய்யப் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை ஆப் செய்தல் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

புதுடில்லி, குருகிராம், பரிதாபாத், காசியாபாத், கவுதம் புத்தா நகர் ஆகிய இடங்களில், பி.எஸ்., 3 ரக பெட்ரோல் மற்றும் பி.எஸ்., 4 ரக டீசல் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.