லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தன்னுடையது எனக் கூறி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1 ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை தனது ரசிகர்களுக்கு கூறினார் அதில், “காட்டுக்கு வேட்டைக்கு போகும் வேடர்கள் இருவரில் ஒருவர் முயலை வேட்டையாடி முதலில் வந்ததாகவும் இன்னொருவர் யானைக்கு குறிவைத்து அதனை பிடிக்க முடியாமல் தோல்வியுடன் திரும்பியதாகவும் கூறி, இதில் முயலை வேட்டையாடியவரை விட யானையை வேட்டையாட நினைத்தவரே வெற்றிபெற்றவர்” என்று சொன்னார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 2, 2023
விஜய் சொன்ன இந்த குட்டி ஸ்டோரியை ஐந்து வருடத்துக்கு முன்பே தான் கூறியதாக ப்ளூ சட்டை மாறன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]