சென்னை

ன்று முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை, வணிக பயன்பாடு எரிவாயு  சிலிண்டர் விலை நிர்ணயம் செய்கின்றன.

இதனால் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் எரிவாயு சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் 1,898 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.1,999 .50 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. என்பதால் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் ரூ.918.50-க்கு விற்பனையாகிறது.