சென்னை

முன்பிருந்த கர்நாடக அரசுகள் இத்தனை முரண் பிடித்தது இல்லை எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர்,

”அரசில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், சாதாரண பொதுமக்கள் எப்படி சட்டத்திற்குப் பணிவார்கள். தமிழக ஆளுநரின் போக்கு முற்றிலும் சரியில்லை. 

ஆயினும் அவருடைய விளையாட்டை மத்திய அரசு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிடோர் இவ்வாறு வேடிக்கை பார்ப்பது சரியில்லை. 

இதுவரை கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. அவர்கள் எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல அல்லது நாம் ஏதோ ஒரு சலுகை கேட்கிறோம் என நினைக்கிறார்கள். 

நாட்டில் எல்லோரும் இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் விதித்த விதிப்படிதான் நடக்க வேண்டும்.  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒரு அரசாங்கமே நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.”

என்று தெரிவித்துள்ளார்.