சென்னை
சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட்டுள்ளது குறித்து அவர் கணவர் புகார் எழுப்பி உள்ளார்.
சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜீனத் மனைவி ஜோதி நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கட்ந்த 13 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காகக் கடந்த 13-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த பரிசோதனையில் ரத்தநாள அடைப்புக்கான அறிகுறி இருந்ததால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்த நுண்துளை மூலமாக வலது கை மற்றும் கால்களில் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரத்த உறைதல் காரணமாக ஜோதியின் வலது கை மற்றும் 2 கால்களும் கருப்பு நிறத்தில் மிகவும் மோசமாக மாறியது.
எனவே ஜோதியின் உயிரை காப்பாற்ற நேற்று முன்தினம் அவரது வலது கையை மருத்துவர்கள் அகற்றினர்., மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் ஜோதியின் வலது கால் காப்பாற்றப்பட்டது. ஜோதியின் இடது கால் கருப்பு நிறமாக மாறியது. இடது காலை பாதுகாக்க மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஜோதியின் கணவர் ஜீனத் ,-
”என் மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி இருப்பதால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியதால் பரிசோதனை செய்ய போதுமான பணம் இன்ரி ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக வந்தோம்.
அங்குச் சிகிச்சைக்குப் பின் ரத்தநாள அடைப்புகள் பாதிப்பு இல்லை என தெரிவித்து பிறகு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறி கை மற்றும் கால்களில் உள்ள சதைகளை வெட்டி எடுத்துள்ளனர். பிறகு உயிரைக்காப்பாற்ற வேண்டும் என்றால் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
நாங்கள் இதய பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தோம். இப்போது, என் மனைவியின் கையை எடுத்துவிட்டார்கள். என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? எதற்காக ரத்த உறைதல் ஏற்பட்டது? என்பது குறித்து எதுவும் எனக்குத் தெரியவில்லை. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இது நடந்ததா? என எனது மனைவிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்.”
என்று கூறி உள்ளார்.
இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் ,
”தீவிர நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 2 நாட்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதால் அதற்கான பரிசோதனை செய்யப்பட்டபோது ரத்தநாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
ஜோதிக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாத நிலையில், ரத்த உறைதல் நோயால்தான் நெஞ்சுவலி ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவரது வலது கை செயலிழந்து விட்டதால் ழுழங்கைக்கு மேல் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ஜோதியை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.”
என்று விளக்கம் அளித்துள்ளார்..