ஆவின் தயிர் பாக்கெட்டில் இனி தயிர் என்பதற்கு பதிலாக ‘தஹி’ என்று குறிப்பிடவேண்டும் என்று பால் கூட்டுறவு சங்கங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களான ஆவின் மற்றும் நந்தினி ஆகியவற்றின் தயிர் பாக்கெட்டுகள் மீது ‘தஹி’ என்றும் அடைப்புக் குறிக்குள் அந்தந்த மாநில மொழியில் (தயிர்) (மொசாரு) என்று குறிப்பிடவேண்டும் என்றும் கூறியுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கை இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மண்டல வானிலை மைய்ய இணையத்தளங்களில் வானிலையை குறிக்க ‘மௌஸம்’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது போல் அரசு இணையதளங்கள் மற்றும் பல்வேறு செயலிகள் மூலம் இந்தியை திணிக்கும் வேலை கனஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனால் பிறமொழி கலப்புடன் பேசுபவர்களிடம் அபராதம் விதிக்க நேரிட்டால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அதிக வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.