வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “பிப்ரவரி மாதம் முடிய காலியாக இருந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதி காலியானதாக மார்ச் மாதம் தான் அறிவிப்பு வெளியானது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 151ன் படி காலியான தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

மேலும், மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளதால் தேர்தல் குறித்து நாங்கள் அவசரம் காட்டவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.