சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. பொதுவாக பருவகாலங்களில், அதற்கேற்றவாறு நோய்கள் பரவுவது வழக்கம்தான். ஆனால், தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வைரஸ் காய்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்க,  நான்கு நாட்களுக்கு அதீத காய்ச்சல் தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றால், காய்ச்சல் படிப்படியாக குறைந்து விடுகிறது. . உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதே இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தோற்று என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இந்த வைரஸ் காய்ச்சலுக்கு  இதற்கு முக்கிய காரணம் என்றும்,  இந்த காலக்கட்டத் தில், குளிர்ச்சியான பானங்களையும், உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  காய்ச்சல், சளிக்கு  மருத்துவர்களிடன் ஆலோசனையின் பேரில்  மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.