சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்  நாளை (மார்ச் 1ந்தேதி) கொண்டாடப்படும் நிலையில், பொதுமக்களும், திமுக வினரும், அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புதுமையான முயற்சிகளை  திமுக அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, ‘செல்ஃபி வித் சிஎம்’ என்ற  இணையதளமும்,  வாழ்த்து தெரிவிக்க  07127 191333 எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.

‘தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு  நாளை 70 வயதாகிறது.  இதையொட்டி  பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க திமுகவினர் தயாராகி வருகின்றனர். மேலும், நாளை மாலை தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையிலான பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க புதுமையான நடவடிக்கையை திமுக தலைமை அறிமுக்கப்படுத்தி உள்ளது.

அதன்படி, 07127 191333 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். பிப்ரவரி 28 முதல் அதாவது நாளை முதல் வரும் மார்ச் 2 வரை இந்த தொலைபேசி இணைப்பில் வாழ்த்துகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  மெய்நிகர் சேவையை பயன்படுத்தி, முதலமைச்சர் உடன் புகைப்படம் எடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்காக  www.selfiewithCM.com என்ற இணையதளத்துடன் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளது.  அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த புகைப்படத்தை தங்களது சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்லலாம். இந்த புதிய முயற்சியை திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மேற்கொண்டுள்ளது.