மேஷம்

ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கெடைக்கும். ஆனால் அதை வகையா எப்பிடி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று ஒங்களோட நலம் விரும்பும் மற்றும் நம்பகமான பெரியோர்கள் அல்லது சீனியர்ஸ் கிட்ட ஆலோசனை கேட்டு முடிவு செய்ங்க. மாணவர்கள் பெருமைப்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.  புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க. நீங்களே எதிர்பார்க்காத அளவு பொறுமையும் பக்குவமும் வந்திருக்குமே. ஆனால் அது விரக்தியா மாறாமல் பார்த்துக்குங்க. குறிப்பாய்க் காதல் விவகாரங்களில் சில சறுக்கல்களும் ஏமாற்றங்களும் ஏற்படாதபடி பேசிப்பழகுங்க. ஆலய வழிபாட்டால் அமைதி கண்டு நிம்மதியடைவீங்க. உழைப்பிற்கேற்ற பலன் ஓரளவே கெடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். உறவுகளைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீங்க. அதில் பலன் ஏற்படும். பணத் தட்டுப்பாடு காரணமாக மனதில் இத்தனை நாட்களாக ஏற்பட்டிருந்த சஞ்சலம் மறையும்.

ரிஷபம்

செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டாலும் முக்கிய செலவுங்க உங்களை நோக்கி வந்துக்கிட்டே இருக்கும். டஸ் நாட் மேட்டர். பிகாஸ்… சில செலவுகள் அத்தியாவசியமாகவும் எதிர்கால நன்மை கருதியும் இருக்கும்தான். பாஸ்போர்ட் விசா சம்பந்தமான செலவுகளாகவும் இருக்கும். லாபங்கள் சற்று நிதானமாகத்தான் வரும், பயம் வேண்டாம். கட்டாயமாக வரும். ஏராளமான நண்பர்கள் உங்களுக்குச் சேருவாங்க.  அவர்களிடம் சற்றே கவனமுடன் பழகினால் போதும்.  மனசுவிட்டுப் பேசுகிறேன் பேர்வழி என்று சகலத்தையும் கவிழ்த்துக் கொட்டி வைக்காதீங்க. தொழில் செய்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நன்மையடைவீங்க. குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வீங்க. ஆலோசிக்காமல் அவசர முடிவு எடுக்க வேண்டாம். பாகப்பிரிவினை தொடர்பான முடிவை தள்ளிப் போடுங்கள். இந்த வாரம் திங்கட்கிழமை,நண்பர் ஒருவரின் செயல் சந்தோஷம் கூட்டும். எதிர்பார்த்த உதவிகள் கெடைக்கும். கெடைக்கும்

மிதுனம்

அடுத்தடுத்து வருமானமும் லாபங்களும் வரும். ரொம்ப காலம் காத்திருந்த தொகைகள் கைக்கு வரும். உங்களுக்குத் திரும்ப வர வேண்டிய அல்லது நீங்க திருப்ப வேண்டிய கடன்கள் கேட்டுக்கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு முடிவுக்கு வரும்.  குழந்தைங்க உங்களை மனம் நோகப் பேசினாலும் சரி.. அவங்க செயல்கள் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினாலும் சரி.. சற்றே பொறுமையை அணிந்து கொள்ள வேண்டும். சரியாகும். சரியாவாங்க.  மம்மி கிட்ட சண்டை போடாதீங்க, நல்ல வேளையாய்க் குடும்பம் ஜாலியா ஹாப்பியா இருக்கும். கடன் பிரச்னைங்க முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய தகவல் ஒன்று வெளிநாட்டிலிருந்து வரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். . வழிபாடுகள்ல  அதிக நம்பிக்கை வைப்பீங்க.  உங்களுக்கு நன்மை தரக்கூடிய வாரம் இது.  பெரிய நன்மை நிகழும். உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட சான்ஸ் கட்டாயம் உண்டு.

கடகம்

பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி தென்படும். தொழில் செய்யறவங்க, தங்கள் துறையில படிப்படியாக முன்னேற்றம் பெறுவீங்க. குடும்பத்துல சந்தோஷம் நிலவும். குடும்பச் சொத்துக்களால் ஏற்பட்டிருந்த சிறு குழப்பங்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் இருந்த நிலை மாறி மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீங்க.. ஆதாயம் தரும் தகவல் வாரத்தின் முற்பகுதியில் வரும். லாபமும் வருமானமும் சந்தோஷம்தரும். திடீர் மாற்றங்கள் உற்சாகம் ஏற்படுத்தும். சகோதர சகோதரிகளின் குடும்பங்களுடன் ஒற்றுமையும்சந்தோஷ உறவும் நிலவும். எடுத்துக்கொண்ட வேலைகள். பொறுப்புகள் அனைத்தும் எளிதாக முடியும் வாரம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்துல ஒற்றுமை பலப்படும்.

சிம்மம்

ஆரோக்கிய பாதிப்புகள் இருந்தவர்களுக்கு இப்போது முற்றிலுமாக நோய் தீர்ந்து, புத்துணர்வு ஏற்படும். தொழில் செய்பவர்கள் நேர்மை மற்றும் கண்ணியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருந்தால்தான், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க இயலும். குடும்பத்துல உறவுகளால் ஏற்படிருந்த மனக்கசப்பு தீரும். சாமர்த்தியமான யுக்திகள் மற்றும் செயல்பாடுகளைக்கொண்டு எதையும் வென்று நிமிர்வீங்க. எடுத்த புதிய முயற்சிகளில் எளிதில் வெற்றி கெடைக்கும். முக்கியமான சில  பிரபல நபர்களைச் சந்தித்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொள்வீங்க. திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்னைகள் ஃபுல்லா தீர்வதற்கான சான்ஸஸ் உருவாகும். மேரேஜ் தொடர்பான விஷயங்கள்ல தேவையான ஹெல்ப்ஸ் கெடைக்கும். குடும்பத்துல குதூகலமான நிகழ்வுகள் நடைபெற்று மகிழ்விக்கும்.

கன்னி

சொந்தக்காரங்களால ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டும் விதமாக அவங்க நன்மை செய்வாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீங்க. பொதுநலத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவாங்க. வரவு திருப்திகரமாக இருக்கும்.  உழைப்பு உயரும். கணவன் – மனைவி இடையே  இருந்து வந்த சிறு மனக்கசப்புகள் ஒங்களோட இனிய முயற்சியால்  முடிவுக்கு வரும்.. விட்டுக்கொடுத்துச் சென்று நன்மை அடைவீங்க. இந்த வாரம் புதன்கிழமை, நல்ல செய்தி ஒன்று வர சான்ஸ் உள்ளது. சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். புதிதாக வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 26 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருந்தால் பிரச்னை ஏதும் வராது.

துலாம்

தெய்வீக மற்றும் ஆன்மிகச் சிந்தனைங்க மேலோங்கும். தெரியாத ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீங்க. வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப்போட்டிகள் திடீரென்று காணாமல் போகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத அமவுன்ட்ஸ் வர்றதுக்கு சான்ஸ் உண்டு. மகன் /மகள் (வயசுக்கேத்தபடி) படிப்பு அல்லது ஜாப் அல்லது மேரேஜ் விஷயத்துல முன்னேற்றம் காணப்படும். தெய்வீக பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் சிறு தாமதம் ஏற்பட்டால் டென்ஷன் ஆக வேண்டாம்.  குடும்பத்துல அமைதி நிலவும். தொழிலில் பொருளாதார உயர்வும், சிறு செலவும் இருக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கலாம். பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். வம்பில் இழுத்துவிடக்கூடிய செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். சிக்கலில் மாற்றிவிடக்கூடிய நண்பர்களை விலக்குங்கள். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட்டு மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருந்தால் பிரச்னை ஏதும் வராது.

விருச்சிகம்

அக்கம்பக்கத்துலயும் ஆபீஸ்லயும்  உள்ளவர்களை அனுசரிச்சு நன்மை காண்பீங்க. விரயங்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால்  நன்மை ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு நன்றாகவே கெடைக்கும்.  குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே எதிரணியில் இருப்பதுபோல் தோன்றிய நிலை மாறி சுமுக உறவு மேம்படும். புதிய தொழில் தொடங்குவது, இருக்கும் தொழிலை விரிவு செய்வது போன்ற விஷயத்தை தைரியமாகச் செய்ய ஆரம்பிக்கலாம். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்தி நன்மை காண்பீங்க. உணவில் கட்டுப்பாடு அவசியம் தேவை. நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உற்சாகமாகப் பொழுது போகும் செயல்களில் ஈடுபடுவீங்க. பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்து, மற்றவர்கள்  பற்றிய வம்பில் தலையிடாமல் இருந்தால் நன்மையடைவீங்க.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை

சந்திராஷ்டம தினங்களின்போது பேச்சிலும் செயலிலும் மிகவும் கவனமாக இருந்தால் பிரச்னை ஏதும் வராது.

தனுசு

யோகமான வாரம். உங்களுக்கு வாய்ச்ச நண்பர்களால வாழ்க்கைலயும்,  பொருளாதாரத்திலும் வளர்ச்சி கூடும். வருமானம் நல்ல முறைல இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு எதிர்பாலினத்தினர் மற்றும் வேறு மொழி பேசுபவர்களின் ஒத்துழைப்பு உண்டு.  நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கெடைக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீங்க. தொழில் செய்யறவங்க ரொம்பவே கவனத்துடன் செயல்படுங்க. கோபத்தைக் குறைச்சுக் காரியத்துல நிதானம் காட்டுங்க. குடும்பத்துல விட்டுக் கொடுத்துடப் போனா நன்மை பெற முயற்சிக்கலாம். அலுவலகப் பணியாளர்களுக்கு திடீரென்று கூடுதல் பொறுப்புகள் கெடைக்கும். இதன் மூலம் உங்களின் திறமை வெளிப்படும்படி நடந்துகொள்ளுங்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

மகரம்

ஸ்மால் ஸ்மால் பிரச்னைங்க வந்தாலும்கூட இதமாப் பேசி சமாளிப்பீங்க. வீட்டில் உள்ள பெண்களால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். ஒங்களோட வாழ்க்கையும் முன்னேற்றமும், பார்த்தவர்கள் பொறாமைப்படும்படி இருக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கெடைக்கும். ஆபீஸ்ல இருந்து வந்த பூசல்கள் விலகி புதுப்பாதை அமையும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வீடு சம்பந்தமான பிரச்சினை தீரும். பல நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு விஷயத்தில் வெற்றி கெடைக்கும். பணியாற்றும் இடங்களில் பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கிய தொல்லை வந்தால், உடனடியாக மருத்துவ. தெய்வ தரிசன சான்ஸ் கெடைக்கும். காரியம் கை கூடும் என்றாலும் நிதானமாக செயல்படுங்கள்.

கும்பம்

இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த மனக்குழப்பம் மெல்ல முடிவுக்கு வரும். வீடு, இடம் வாங்குவது பற்றிய ஒங்களோட தீர்மானம் நல்ல முடிவுக்கு வரும். மாமன், மைத்துனர் மூலமாக நல்ல விஷயம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். தொழிலில் முதலீடு செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி திடீரென்று இந்த வாரம் உங்களைத் தேடி வரும். பணப் புழக்கம் தாராளமாகும். இருந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுங்கள். நண்பர்கள், உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிப் பழைய நட்பு புத்துயிர் பெற்று உற்சாகமளிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெரியவர்களின் ஆசிர்வாதம் கெடைக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, நீங்க எதிர்பார்த்திருந்த செய்தி வந்து நிம்மதி தரும். வெளிநாட்டில் உள்ள உறவினர் மகிழ்ச்சிகூட்டும் தகவல் அளிப்பார்.

மீனம்

ஆபீஸ்ல அதிக உழைப்பை ஏற்படுத்தக்கூ/டிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும். அதற்கேற்ற ஊதியம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரிவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்யும் சூழ்நிலை உண்டாகக்கூடும். மறதி அதிகரிக்கும். ஈடுபட்ட விஷயம் ஒன்றில் நல்ல முறையில் வெற்றி ஏற்பட நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.  குடும்பத்துல இதுவரை இருந்து வந்த சிறு சிறு மனஸ்தாபங்களும் வாக்குவாதங்களும் விலகும். பொருளாதார வரவால் கடன் பிரச்னை ஓரளவுக்கு நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு காண்பீங்க. தொழில்/ வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய தொகை தள்ளிப் போவது பற்றி டென்ஷன் வேண்டாம். உடல்நலனில் ஏற்பட்டிருந்த சிறிய பாதிப்பு மறையும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு சிறப்பான சான்ஸ்கள் கெடைக்கும்