சென்னை: பிரபல நடிகர் பிரபுவுக்கு நேற்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்  சென்னையில் உள்ள  மெட்வே மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது  சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. தற்போது பிரபு பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.

டபிரபுவின் உடல் நிலை குறித்து கேளம்பாக்கத்தில் அமைந்து இருக்கும் மெட்வே மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு, நேற்று இரவு ( பிப்ரவரி 21) சிறுநீரகப் பிரச்னை காரணமாக காரண மாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறு நீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் விரைந்து அவர் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் அவரின் உறவினர் களை தொடர்பு கொண்டு பிரபுவை விசாரித்து வருகின்றனர். நடிகர் பிரபு கடைசியாக வாரிசு படத்தில் சரத்குமாரின் நெருங்கிய நண்பராகவும், மருத்துவராகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.