கிருஷ்ணகிரி: திமுக கவுன்சிலர் தனது ஆதரவு ரவுடிகளுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திமுக கவுன்சிலர் தலைமறைவாகி உள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக பிரமுகர்களும், கவுன்சிலர்களின் அடாவடி போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது, தற்போது லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பிலும் வெளிப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்தவிவகாரத்தில், ராணுவ வீரரை தனது ஆதரவாளர்களுடன் சென்று திமுக கவுன்சிலர் தாக்கியதில், காயமடைந்தர ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று, (பிப்ரவரி 8ந்தேதி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பட்டி அடுத்த வேலம்பட்டி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பெண் ஒருவர் துணிதுவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுமந்த நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று ஆத்திரமாக கேட்டிருக்கிறார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர், சின்னச்சாமி. ஆனால் அன்று மாலையில் உறவினர்கள் , ஆதரவாளர்கள் 10 பேரை திரட்டி கொண்டு இந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பெண்ணின் கணவரன் பிரபாகரனையும் அவரது தம்பி பிரபுவையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.
பிரபாகரன். இவரது தம்பி பிரபு. இருவருமே ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்கள். ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த நேரத்தில் இநத் சம்பவம் நடைபெற்றது.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகிச்சை பெற்று வந்தார் . இன்று அவர் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திமுக கவுன்சிலர் மற்றும் அவரது மகன்கள் ராஜபாண்டி , சென்னையில் போலீசாக இருக்கும் சூரிய குரு , சூரியமூர்த்தி மற்றும் அவர்களின் உறவினர்கள் வேடியப்பன் , மணிகண்டன் 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும், தலைமறைவான திமுக கவுன்சிலர் உள்பட மேலும்சிலரை கைது செய்ய தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.