மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  மே 5;ந்தேதி  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரை திருவிழா. பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் இந்த திருவிழா உலகப்புகழ் பெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ளும் சித்திரை திருவிழாவின்போது,  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும்,  ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல் யாணம் போன்றவை பெரும் சிறப்பு வாய்ந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான (2023)  மதுரை சித்திரை திருவிழா  தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.  அன்று முதல் 16 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது, மதுரை மாநகரமே குலுங்கும். சித்திரை திருவிழாவின் போது மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும்.

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ம் தேதி நடைபெற உள்ளது. மே 1ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். மே 5ம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைவபம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் மு. ராமசாமி அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 1432-ஆம் பசலி 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் வருகிற 26.01.2023ஆம் தேதி தை மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் காலை 8.15 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை பூச தெப்பத்திருவிழா முடிந்து மாசி மாத திருவிழாக்கள், பங்குனி உத்திர திருவிழாக்கள் முடிந்த பின்னர் சித்திரை மாதம் திருவிழா தொடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. அழகர் வாராரு..மீனாட்சி கல்யாணம்,வைகையில் இறங்கும் கள்ளழகர்..மதுரை சித்திரை திருவிழா முழு விபரம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவார் என குறிப்பிடப் பட்டுள்ளது.