சென்னை: முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பள்ளிகள் இயங்குவதை தடுக்கும் நடவடிக்கை குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.  இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்று. தனியார் பள்ளிகள் அதிகம் செயல்படுவது சென்னையில்தான்.

இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, அதனை கொண்டு கிளை பள்ளிகளை திறந்து, அதில் மாணவர் சேர்க்கை மேற்கொண்டு வருவதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்துக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சென்னையில்

அந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 162 தனியார் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக அவர்கள்  , விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெறப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து உள்ளது.

முறையாக இயங்கும் பள்ளிகளை அதிரடியாக செயல்படாமல் தடுக்க வேண்டிய அரசு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க அவகாசம் கொடுப்பது, முறைகேட்டை ஊக்குவிக்கும் செயல் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.