சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர், கடந்த 9ந்தேதி தொடங்கியது. முதல் ஆளுநர் உரையின்போது, நடைபெற்ற சம்பவங்கள் தமிழக சட்டமன்றத்துக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தொடர்ந்து இன்றுவரை 5 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது.
இன்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார். அதைத்தொடர்ந்து, தமிழில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத்திருத்த மசோதா பேரவையில் இன்று நிறைவேறியது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.