மேஷம்

ஹாப்பி புது வருஷம்

மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தி உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யும். எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது முன் வரை இருந்து  வந்த மந்த நிலையும், நிதானப்போக்கும் இருக்காது. பயமோ டென்ஷனோ வேண்டாங்க. நண்பர்கள் அபாரமாக உதவுவாங்க. குறிப்பாக எதிர்பாலினத்தினர் உங்களுக்காக மனப்பூர்வமாக நன்மைகள் செய்வாங்க. அதை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்க.  ஆல் த பெஸ்ட். தொழில் முதலீடுகளை அதிகப்படுத்த அரசாங்க கடன் வாங்குவீங்க. கட்டுமானத் துறையில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீங்க. பழுதான வாகனங்களைச் சீர்படுத்துவீங்க. கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். பத்திரங்களில் கையெழுத்துப் போடும்போது கவனமாகச் செயல்படுங்க. வியாபாரம் அமோகமாக நடக்கும்.

ரிஷபம்

ஹாப்பி புது வருஷம்

குடும்பத்தில் யாருக்கேனும் திடீரென்று திருமண சான்ஸ் வரும். திருமணத்திற்குக் காத்திருப்பவர் நீங்க என்றால் உங்களுக்கே நற்செய்தி வரக்கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து தேவையான உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வாக்கு சாதுர்யத்தால் மற்றவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பீங்க. உங்க குழந்தைங்களுக்கு அரசாங்க நன்மைகள் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கே அரசாங்கத்தால் லாபம் உண்டு. பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் அது கிடைத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பாங்க. தந்தைக்கு ஏற்பட்டிருப்பதெல்லாம் தற்காலிகமான பிரச்சினைகள்தான். பெரிதாக எண்ணி பயப்படாதீங்க. வாக்கினால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.

மிதுனம்

ஹாப்பி புது வருஷம்

உங்க வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிச்சு முன்னேற்றம் காண்பீங்க. பிள்ளைகளுடனான உறவில் நிதானம் தேவை. குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வாங்க. மருத்துவத் துறையிலும் கட்டத்துறையிலும் உள்ளவங்களுக்கு நன்மை உண்டு. குழந்தைங்க உங்களைப் பெருமிதம் அடையச் செய்யுமளவு சாதனைகள் செய்து பாராட்டு வாங்குவாங்க. கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மிகப்பெரிய முன்னேற்றம் காண்பாங்க. தயவு செய்து இப்போதைக்கு வேறு வேலை மாறுவது பற்றி நினைச்சும் பார்க்காதீங்க. பல காலமாகத் திட்டமிட்டிருந்த கோயில் குளம் / வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குலதெய்வப் பயணங்கள் தடைப்பட்டாலோ, தாமதமானாலோ கவலை வேண்டாம்.

கடகம்

ஹாப்பி புது வருஷம்

எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் பல வகையில் அலைச்சல்கள் இருந்தாலும், லாபகரமான சூழல் நிலவும். தொழில் நுட்ப கருவிகள், தொழில், வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும். உங்களின் பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல, தட்டிக் கொடுத்து வேலை வாங்க செயல் திறன் கூடும். வளர்ச்சி அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பாராத பொருள் வரவுக்கு சான்ஸ் உண்டு..

சிம்மம்

ஹாப்பி புது வருஷம்

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீங்க. நீங்க எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீங்க. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மனஅமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும். எந்த நிலையிலும் மனம் தளராதீங்க. முழு மனசோட காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை

கன்னி

ஹாப்பி புது வருஷம்

உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் சான்ஸ் ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிக்கும் அளவுக்குப் பணவரவு இருக்கும். வாரப் பிற்பகுதியில் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு போட்டியில் ஈடுபடும் மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவீங்க. வண்டி, வாகனத்தை கையாள்வதிலும், பயணங்கள் செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை

துலாம்

ஹாப்பி புது வருஷம்

அலுவலகத்தில் பெரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாதுங்க. நத்தை அல்லது  ஆமையின் வேகத்தில்தான் எல்லாமே நடக்கும். அதனால் என்னங்க? பரவாயில்லை. விடுங்க. கூடிய சீக்கிரத்தில் எல்லாமே தானாய்ச் சரியாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீங்க. உங்களின் முயற்சிக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடியதாகவும், அங்கிகாரம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அதே சமயம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பதவி உயர்வும், ஊதிய உயர்வையும் பெறுவீங்க. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்கவேண்டும். போன வாரம் ஏற்பட்ட பிரச்னைங்க தீரும். சக பணியாளர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகை உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனசு உற்சாகமாயிருக்குமுங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 2 முதல் ஜனவரி 5 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை  

விருச்சிகம்

ஹாப்பி புது வருஷம்

கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். பொது இடத்தில் பேச்சில் நிதானம் தேவை. புதிய இன்வெஸ்ட்மென்ட்ஸ் செய்வதானால், சற்று கவனமாக இருப்பது அவசியம். அரசுத் துறை சேர்ந்த விஷயங்களில், செயல்பாடுகளில் அற்புதமாய்ச் செயல்படுவீங்க. டோன்ட் ஒர்ரி. பேங்க் லோன் கிடைச்சுடும். மகள்/ மகன் கல்யாணம் ஏற்பாடாகும். வாகனம் மற்றும் வீடு, மனை வாங்கும் போது கவனம் தேவை. முக்கிய ஆவணங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வெயிட் அண்ட் ஸீ. ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் செய்வீங்க. ஆனால் லிமிட்டா செய்ங்க. குடும்பத்திலும், மனதிலும் இருந்த குழப்பங்கள் நீங்கி நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

தனுசு

ஹாப்பி புது வருஷம்

உழைக்கத் தயங்காமல் ஓடிக்கிட்டிருக்கீங்க. அதனால பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றமான சான்ஸ்கள் உண்டாகும். பல துறையில் உங்களின் தேடல் அதிகரிக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும், உங்களின் செயல்பாடு சிறப்பாகவும், பொறுமையுடனும் செயல்பட்டு செயல்களில் வெற்றி பெறுவீங்க. அதன் மூலம் நல்ல லாப நிலை உண்டாகும். ஆனால் எந்த முன்னேற்றமும்  வேகமா இருக்கும்னு எதிர்பார்க்காதீங்க. எல்லாம் நிதானமாத்தான் நடக்கும். ஸோ வாட்.. நல்லபடியா முன்னேற்றம் உண்டு. அது போதாதா? உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வப்போது சின்னச்சின்னப் பிரச்சனைங்க ஏற்பட்டு நீங்கும். யூ வில் பி ஃபைன். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

மகரம்

ஹாப்பி புது வருஷம்

உங்க குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவங்களுக்கு, அவங்க எதிர்பார்த்த மாதிரியான வரன் அமையும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விவாதம் ஏற்படலாம். பிள்ளைகளுடன் நல்ல புரிதல் ஏற்படும். அவங்க உங்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்வர். மம்மிக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். புதுசா வண்டி வாகனமெல்லாம் வாங்குவீங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கு நிறைய உதவிங்க செய்து அவங்களுக்கு டியர் ஆவீங்க. ஆரோக்யம் சூப்பரா இருக்கும்./ மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் படிப்பீங்க. விளையாட்டு போட்டிகளில் பரிசு, பதக்கங்கள் வெல்ல சான்ஸ்ள்ளது. சிலருக்கு மேற்கல்வி தொடர்பான வெளிநாடு, வெளியூர் பயணம் செய்வீங்க. விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றி பெறுவீங்க. ஒங்களோட பேச்சு, செயலில் கவனம் தேவை, எந்த ஒரு தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற எண்ணங்களை கைவிட்டு, நம்பிக்கையோடு, ஒங்களோட முயற்சிகளைச் செயல்படுத்துங்கள். யூ வில் வின்.

கும்பம்

ஹாப்பி புது வருஷம்

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தைத் தொலைத்து விடாதீங்க. போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையாது. எந்தக் காரியத்திலும் துணிச்சலாக இறங்குவீங்க. அதில் வெற்றியும் பெறுவீங்க. வியாபாரிகள் புதிய பொருட்களை அறிமுகம் செய்வாங்க. வாடிக்கையாளர் வருகையால் பணவரவு தாராளமாக இருக்கும். தாய்மாமன் உறவில் நெருக்கமும் மகிழ்ச்சியும் ஏற்படும். அதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே போக்குவரத்து அதிகமாகலாம். சுப நிகழ்ச்சிகளில் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்குத் தேவையான நகைகள் வாங்குவீங்க.

மீனம்

ஹாப்பி புது வருஷம்

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி மற்றும், எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா செல்வீங்க. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். சில நேரங்களில் அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும், ஆதரவாகவே இருப்பாங்க. தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பல வகைகளிலும் அனுகூலமான வாரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறை வேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.