சென்னை:
ங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவசதியாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவசதியாக, சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 அன்று வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை,கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

இது தவிர கோயம்புத்தூர், ஈரோடு, புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு,தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன், கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளன.

அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in. மற்றும் tnstc official appஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.