சென்னை: பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.   சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,   சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். அவர்களுடன்   தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர் ஒருவர் இவர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த 3 பேரையும் வீட்டில் விட்டு சென்றவர், காரில் சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார். அவர் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம்.  தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் முடிவுகள் 4 அல்லது 5 நாட்களில் கிடைக்கும்.

மேலும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த விருதுநகர் தாய் மகளுக்கு கொரோனா பாதிப்பு!