சென்னை: கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை நகர்ப்புற சேவைகளை மேம்படுத்தும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியுடன் தமிழகஅரசு  ரூ.1,040 கோடி கடன் ($125 million)  ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை நகரங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன், அதாவது 125 மில்லியன் டாலர்  ஒப்பந்தத்தில் நேற்று (டிசம்பர் 27) கையெழுத்திட்டன.

தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹோ யூன் யோங்கும் கையத்திட்டனர்.

மதுரையில் வருவாய் இல்லாத குடிநீர் விநியோகத்தைக் குறைக்கும் வகையில் மீட்டர் பொருத்தப்பட்ட புதிய 115 குடியிருப்புப் பகுதிகளில் 1,63,958 வீடுகளுக்குக் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக 813 கிலோ மீட்டர் தூரத்திற்குக் குழாய்கள் அமைப்பதற்கான திட்டத்திற்கு இது உதவும். அதேபோல கழிவுநீர் சேகரிப்பு முறை, தண்ணீர் சேமிப்பு, சுகாதாரம், துப்புரவு மற்றும் சுகாதாரம், தூய்மை ஆகியவை ஆகியவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதற்காக கோயம்புத்தூரிலும் மதுரையிலும் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.