திருச்சி: திருச்சி பாப்பாக்குறிச்சி அரசு பள்ளியில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை தலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதிலும் உள்ள 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டூரில் இன்று தொடங்கி வைத்தார்.  நடமாடும் வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஏற்கனவே இதே பள்ளியில்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பசிப்பிணி போக்க சத்துணவு திட்டம் தொடங்கி வைத்த அதே பள்ளியில் அடுத்த தலைமுறை அறிவால் உலகை வெல்வதற்கு வானவில் மன்றம் புதிய திட்டத்தை முதலமைச்சர் இன்று அதே பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார்

2நாள் அரசு முறை  நிகழ்ச்சியாக திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை  திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் ‘வானவில் மன்றம்’ அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 13,200 அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வானவில் மன்றம் அமைப்பு இன்று தொடங்கப்பட்டு உள்ளது..   மேலும் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்களுடன் கலந்துரையாடல்: பின்னர், திருச்சி பாப்பாக்குறிச்சி அரசுப் பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக 150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடமாடும் ஆய்வக தன்னார்வலர்கள் 20 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த, பள்ளிகளில் முதல்முறையாக ‘வானவில் மன்றம்’ அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சிறந்த நிபுணர்களை கொண்டு அறிவியலில் செயல்முறை வடிவில் பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து மாணவர்களின் கற்றல் மேம்படுத்தப்படும்.

அதன்படி, அறிவியல், கணிதப் பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல்கட்டமாக ரூ.1,200 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து, மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும். மன்றத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும். இதை செயல்படுத்துவதற்கான காணொலிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

வானவில் மன்றத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவ.28-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, இன்று மதியத்துக்குள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13,210 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்பட வேண்டும். இதன் தொடக்கமாக ஆசிரியர்கள், மாணவர்கள் ஓரிரு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.1.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை வாங்கி, சோதனைகளை செய்து காண்பித்து, மாணவர் கேள்வி கேட்பதை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.