நாமக்கல்: உலக கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக, ஐக்கிய அரபு நாடான கத்தாருக்கு மாதம் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் 50லட்சத்தில் இருந்து 2 கோடியாக அதிகாரிகக்கப்பட்டு உள்ளது. இந்த முட்டைகள், 30 கன்டெய்னர்கள் மூலம் கத்தாருக்கு அனுப்பப்படுகின்றன.
பிஃபா உலககோப்பை கால்பந்துபோட்டி கத்தாரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து மைதானத்தில், ஏற்கனவே பீர் போன்ற மதுபானங்களுக்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு கால்பந்து ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்ய நாமக்கல்லில் இருந்து முட்டை இறக்குமதியை அந்நாடு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 1000-க்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநா டுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொதுவாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு மாதம் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், உலக கோப்பை கால்பந்து போட்டிகள் காரணமாக இந்த மாதத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி 2 கோடியாக அதிகரித்துள்ளது. கத்தாரில் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் மேலும் 3 மடங்கு அதிகரித்து மாதம் 2 கோடி முட்டைகளை அனுப்ப அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளதுழ.
இதன்படி மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 2 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.