சென்னை: சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதை மத்தியஅரசிடம் இருந்து பெற்ற நிதியமைச்சர் பிடிஆர், அதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து  வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்  பிடிஆர். பழனிவேல் ராஜன்,   சந்தித்து, “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.