சென்னை; வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு – கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது எனவும் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள டிட்விட்டர் பதிவில், அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஒன்று இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே உருவாகலாம். அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் முதல் சக்கரம் இது என்றும் கூறலாம் என தனது தெரிவித்திருந்தார்.