சென்னை:
பத்திரப்பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமம் பெற சிறப்பு தேர்வு கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள உத்தரவில், ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்காக நடத்தப்பட வேண்டிய சிறப்பு பொதுத்தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதில், ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதித் தேர்வினை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எளிமையான வகையில் மாநிலம் முழுமைக்கும் ஒரே தேர்வாக நடத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வு நடத்துவது தொடர்பாகவும், தொழில்நுட்ப தகுதி தொடர்பாகவும், தமிழக ஆவண எழுத்தர் உரிம விதிகள் திருத்தங்கள் மேற்கொள்ள அதை அரசுக்கு அனுப்பி அரசின் உரிய அனுமதி ஆணை பெறப்பட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.