சென்னை: மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும், ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுக் நடத்தியது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாக இருந்தது. இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் மகளிர் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில்,, மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்றவேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஏற்கெனவே மகளிருக்கான இட ஒதுக்கீட்டுக்கீட்டில் நடைமுறையில் இருந்த செங்குத்து நகர்வுக்கு பதில் கிடைமட்ட நகர்வு முறை பின்பற்றவேன்றும் என்றும், ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.
இந்த புதிய நடைமுறையின் படி தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் ஆனதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.