உத்தரபிரதேசம்:
ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதாக மணமகள் தரப்பினர் தெரிவித்ததை அடுத்து இரு வீட்டார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சன்னி என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.