சென்னை: சட்டசபையில் ஓ.பி.எஸ். இருக்கை விவகாரத்துக்கு  பேரவையில் நாளை கேள்வி கேட்டால் பதில் அளிப்பேன் என சட்டமன்ற சபாநாயகர்  கூறினார்.

அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு இடையே ஏற்பட்டுள்ள மோதலில், எடப்பாடி கை ஓங்கி உள்ளது. ஆனால், ஓபிஎஸ்க்கு திமுக, அமமுக, சசிகலா போன்றோரின் ஆதரவு உள்ளது. இதற்கிடையில் அதிமுக விவகாரத்தில் நீதி மன்றத்தின் அனுமதியில் நடைபெற்ற பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செய லாளராக நீடித்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக சட்டசபை சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பினார். ஆனால், இந்த விஷயத்தில் சபாநாயகர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 2 பேருடன் வருகை தந்து, சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்து பேரவை நிகழ்வில் கலந்துகொண்டார். இது 65 அதிமுக எம்எல்ஏக்களில் 61பேர் ஆதரவு கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சபாநாயகர் அப்பாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்கூற மறுத்த சபாநாயகர், அதற்கான பதிலை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவரின் இருக்கை விவகாரம் தொடர்பாக  4 கடிதம் தந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 கடிதம் கொடுத்துள்ளனர். அதுகுறித்து தற்போது ஏதும் கூற முடியாத என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள்,  ஓ.பன்னீர்செல்வம் இன்றைய அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார்?  என கூறினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர்,  அவர் அலுவல் ஆய்வு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். அந்த அடிப்படையில் பங்கேற்றுறார் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  தரப்பிலான பெரும்பான்மையான அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் இன்றைய கூட்டத்துக்கு வரவில்லையே?  என்ற கேள்விக்கு  மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு விழாவை இன்று அவர்கள் சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருப்பதாக யாரோ தகவல் சொன்னார்கள். அதன் அடிப்படையில் இங்கு வராமல் இருக்கலாம் என நான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து பிரச்சினை  நீடிக்கிறது, எந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நீடிக்கிறார் என்ற கேள்விகளுக்கு,  எல்லாம் சட்டமன்றம் நடப்பதால் சட்டமன்றத்தில் தான் அதற்குரிய பதிலை சபாநாயகர் கூற முடியுமே தவிர பொது வெளியில் பேட்டியில் சொல்ல எனக்கு விருப்பமில்லை. அது பொருத்தமாக இருக்காது. இதுதொடர்பாக நாளை சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டால் அங்கு நான் பதில் சொல்வேன். எனவே இப்போது சட்டமன்றம் நடக்கும்போது இதற்குரிய பதிலை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் (நிருபர்கள்) நாளை வருவீர்களா? அல்லது அவசர வேலையாக வெளிநாடு போகிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லையே?  நாளை சட்டசபைக்கு வாருங்கள். அங்கு எம்.எல். ஏ.க்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன். எனவே யாரும் கேள்வி எழுப்பாமல் நானாக எப்படி பதில் சொல்ல முடியும்? என எதிர்கேள்வி எழுப்பினர்.

அதிமுகவில் எம்.எல். ஏ.க்களுக்கு தனிப்பட்ட முறையில் சில பிரச்சினைகள் இருக்கும் என்று சொன்னால் சட்டமன்றத்தில் எனது கவனத்துக்கு வந்தால் பதில் சொல்வேன். இந்த மாதிரி தபால் தந்துள்ளோம். அதற்கு என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்குரிய பதில் சட்டமன்றத்தில் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.