மதுரை: தென்மாவட்டங்களில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகளால் சென்னை- குருவாயூர் விரைவு ரயில்  உள்பட சில ரயில் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாக வும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

வெள்ளனூர் – புதுக்கோட்டை, மானாமதுரை – மேல கொன்னகுளம், திண்டுக்கல் – அம்பாத்துரை ராஜபாளையம் – சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே அக்டோபர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாக  திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை  ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை – மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் – அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை  கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது. ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 வரை  முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேலும் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15 வரை மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.