கோவை:
மண்ணெண்ணெய் பாட்டில் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 4 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பான வழக்கில், கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றும், ஏற்கனவே 11 வழக்குகளில் 14 பேர் கைதான நிலையில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.