சென்னை; வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகஅரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்ற பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பணிகள் ஏதும் தொடங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்நிலைகள் கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.