சென்னை: 14-வது ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை (செப்டம்பர் 20-ல்) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக என அறிவித்து உள்ளனர்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்த நிலையில், அதை நிறைவேற்றாததால், போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. தமிழ்நாட்டிலுள்ள 8 போக்குவரத்து கழகங்களில், சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப் படி உயர்வு, ஓய்வு காலப் பயன்கள், மருத்துவக் காப்பீடு போன்ற கோரிக்கைகள் குறித்து பலமுறை தமிழக அரசோடு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்கம் கடந்த ஆகஸ்டு மாதம் 3ந்தேதி போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் தொடர் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து ஆகஸ்டு 22ந்தேதி மீண்டும் பேச்சு வார்த்த நடைபெற்றது. அப்போது, சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகாலமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். ஆனால், அதற்கு பல போக்குவரத்துக்கழக சங்கங்கள் ஏற்க மறுத்தன. அதிமுக தொழிற்சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அசுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச் செயலர் வி.தயானந்தம், மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 2020 மார்ச் 31-ல்3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதேபோல, 2022 ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், அனைத்து பணிமனைகளிலும் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்கள் அவரவர் வழித்தடங்களில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி இல்லாத நடத்துநர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியம்,பஞ்சப்படி, மிகை நேர ஊதியம்வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி அனைத்து பணிமனைகளிலும் ஆர்ப்பட்டம் நடைபெறும் என்று அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.