சென்னை; விடியா திமுக அரசின் அமைச்சருக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை திசை திருப்ப, தனது ஏவல் துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று 3வது முறையாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் புனைந்து, பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது.
எதனை பொய் வழக்குகளை போட்டாலும் அதை சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம். விடியா திமுக அரசின் அமைச்சருக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை திசை திருப்ப, தனது ஏவல் துறை மூலம் எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் திசை திருப்பும் நாடகமே. முன்னாள் அமைச்சர்கள் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். காவல்துறையினர் நடுநிலையோடும், நேர்மையோடும் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய நிலையில் 3வது சோதனை வேடிக்கையானது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்க பதிவில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து, ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரையும், கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும, 7 எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என கண்டித்துள்ளார்.