சென்னை: அறநிலையத்துறை சார்பில் 18 கோயில்களில் ரூ.104.77கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று திறந்து வைத்தார். கோயில்களில் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், அன்னதான கூடம் உள்ளிட்டவைகளும் திறக்கப்பட்டது.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் திருமண மண்டபங்கள், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, அன்னதானக் கூடம், முடிகாணிக்கை மண்டபம், காதுகுத்தும் மண்டபம், வணிக வளாகம், திருக்கோயில் பள்ளி, கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கலையரங்கம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மண்டல இணை ஆணையர் அலுவலகம், ஓதுவார் பயிற்சி பள்ளி போன்ற 25 புதிய திட்ட பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.