திருச்சி: திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற என்ஐஏ ரெய்டின்போதும் ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறைத்துறையினரும், சிறை அதிகாரிகளின் மெத்தனத்தாலும், ஊழல் முறைகேடுகளாலும் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த மாதம் திடீரென வருகை தந்த 50 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு  அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள்,  வெளிநாட்டு அகதிகள் பயன்படுத்திய செல்போன்கள்,  பென்டிரைவ், மடிக்கணினி மற்றும் நகைகள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இதைத்தொடர்ந்து, மற்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழ்க காவல்துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார்,  மத்திய சிறைக்குள் அமைந்துள்ள  அகதிகள் சிறப்பு முகாமில் போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளதா எனசோதனை நடத்தி வருகின்றனர் 3துணை ஆணையர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில், வெளிநாட்டு கைதிகளிடம் இருந்து  60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போதைபொருள் விவகாரம்: சென்னை கேளம்பாக்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…