ஈரோடு: ஈரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தது குறித்து பெற்றோர் கண்டித்ததால், மனம் உடைந்த மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஈரோடு  கல்லுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர் பசீர் அகமதுவின் மகள் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடை பெற்ற தேர்வில், குறைந்த அளவிலேயே மதிப்பெங்ண பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவியை பெற்றோர் கடிந்து கொண்டதுடன்,  அடிக்கடி டி.வி பார்க்காதே எனவும் திட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி,  பெற்றோர் இல்லாத நேரத்தில் எலி மருந்து எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதற்கிடையில் பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது, மாணவி வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சோதனையில் அவர் எலி மருந்து விஷம் சாப்பிட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் தற்கொலைகள்; சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…