சென்னை
தேர்வு எழுதிய 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது., தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதித் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் எடுக்காமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அதிகாரிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆயினும் தேர்வு எழுதாத மாணவர்களுக்குத் தேர்ச்சி இல்லை என்றும், இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்குத் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த முடிவு கொரோனா தாக்கம் காரணமாக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.