சென்னை:
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்செல்வப்பெருந்தகை, விஜயதாரணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Patrikai.com official YouTube Channel