டெல்லி: இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? என கேள்வி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தி மொழி குறித்த விவாதம் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் அஜய்தேவ்கான் சுதீப் இடையே நடைபெற்ற டிவிட் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவல்கள் உள்பட பலர் சுதீப்புக்கு ஆதரவாள களமிறங்கினர்.
இந்த விவாதங்களுக்கு மத்தியில் உ.பி., அமைச்சர் சஞ்சய் நிஷாத், செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும், இந்தி தெரியாவதர்கள் வெளிநாட்டினர் என கருதப்படுவார்கள், அவர்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என கூறினார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்தி மொழிக்கு ஆதரவாக எம்பியும், காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான கேகே மிஸ்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தி இந்தியாவின் மொழி இல்லை என்றால், அது பாகிஸ்தானின் மொழியா அல்லது அமெரிக்காவின் மொழியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தி மொழி சர்ச்சை இப்போது அரசியல் களத்திலும் விவாதப்பொருளாகி வருகிறது.
இந்தியாவில் வாழ விரும்புவோர் ஹிந்தியை நேசிக்க வேண்டும்! உ.பி. அமைச்சர் சர்ச்சை