பிறமொழி படங்கள் வெற்றி பெறுவதை எண்ணி தமிழ் பட கலைஞர்கள் கவலைகொள்ள தேவையில்லை என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
பாகுபலி, 83, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் ஆகிய மற்ற மொழி திரைப்படங்கள் தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்திய அளவில் தொடர் வெற்றியைப் பெற்று வருவது கண்டு தமிழ் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் சினிமா துறையில் உள்ள பல இளம் திறமையாளர்கள் பல கதவுகளை திறந்துள்ளனர் அதனால் பிறமொழி திரைப்படங்களின் வெற்றி குறித்து தமிழ் சினிமா துறையினர் கவலை கொள்ளத் தேவையில்லை.
பிறமொழித் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறுவது புதிதல்ல” என்று உயிரே, ராவணன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் இதயத்தைத் திருடிய இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.