யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஏப்ரல் 14 அன்று வெளியான கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தில் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியுள்ளது.

கே.ஜி.எஃப்-1 ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து உலகெங்கும் ரிலீசான கே.ஜி.எஃப் – சேப்டர் 2 இதுவரை உலகம் முழுவதும் ரூ. 716 கோடி வசூலானது.

இதே வேகத்தில் செல்லும் பட்சத்தில் இந்த திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் வரிசையில் விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி-2, தங்கல் மற்றும் ஆர்.ஆர்.ஆர். ஆகிய மூன்று இந்திய திரைப்படங்கள் மட்டுமே 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இடம்பெற்றுள்ளது.