சென்னை: ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட உள்ள சென்னையில்,  சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறு சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்து உள்ளார். அதன்படி முந்தைய ஆட்சியில் அறிவிப்பட்டவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான ஆலோசனை குழுவை மறுசீரமைப்பு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஸ்மார்ட்டி சிட்டி நிறுவனம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வழிகாட்டுதல் குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வழிகாட்டு குழுவின் துணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘

மேலும், சென்னை மேயர் பிரியா ராஜன், எம்எல்ஏ எழிலன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் உள்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.