சென்னை:
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதன்படி இன்று, சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையிலும், திருச்சியில் ஈபிஎஸ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.