மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘தியான்’ படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆர்.ஜே.வாக இருந்து நகைச்சுவை நடிகராக மாறிய ஆர்.ஜே. பாலாஜி நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அவர் முக்கிய வேடத்தில் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
இதைத் தொடர்ந்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அதேபோல் ஆர்.ஜே பாலாஜி ஜோடியாக நடிப்பவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என படக்குழு தெரிவிக்கிறது.
இந்த திரைப்படம் டார்க் காமெடி திரில்லர் வகையில் உருவாகிறது. வருகிற 23-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் கார்த்தியின் ‘சர்தார்’ படத்தையும் தயாரிக்கிறது.