சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நீதிமன்ற காவல் மார்ச் 9 ஆம் தேதி வரை  நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்ற புகாரில் முன்னாள்  அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், மற்றொரு வழக்கில், அவரை நேற்று இரவு காவல்துறையினர்  செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி பிப்.19 ஆம் தேதி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்  கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. அந்த  வழக்கு தொடர்பான விசாரணையும்  நடைபெற்றது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரை மார்ச் 9 ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.