சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரானா தடுப்பு நடவடிக்ககள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இருநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொற்று பரவலை தடுக்க கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
[youtube-feed feed=1]