கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

படம் பார்க்க வரும் ரசிகர்ளின் நலனில் அக்கறை கொண்டு இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.